நெல்சன் திலீப் குமார் இயக்கிய முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை ஈர்த்து தற்போது டாப் நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை இயக்கி வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா, யோகி பாபு வைத்து முதலில் இயக்கிய திரைப்படம் கோலமாவு கோகிலா.
இந்த திரைப்படமும் காமெடியும் நல்ல கருத்தையும் எடுத்துரைக்கும் திரைப்படமாக இருந்தது இந்த திரைப்படம் அதிக நாட்கள் ஓடியது மட்டுமல்லாமல் சூப்பர் ஹிட் அடித்து அதன்பின் தமிழ் சினிமாவில் டாஃப் நடிகர்களாக இருக்கும் டாப் நடிகர்களான விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்களுடன் கதை சொல்லி அசத்தினார்.
முதலாவதாக சிவகார்த்திகேயன் ஓகே சொல்ல டாக்டர் திரைப்படம் எடுக்கப்பட்டது இந்த திரைப்படமும் காமெடி பெரிதும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது இதை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் அபர்ண தாஸ், பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து இருந்தாலும் டப்பிங் பணிகள் இன்னும் முடியாமல் இருக்கின்றன அதை வெகு விரைவிலேயே தொடங்கிய ரெடியாக இருக்கிறது. பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியிடம் ஏற்கனவே நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துப்போகவே இருவரும் இணைய உள்ளனர் அதற்கான வேலையை ஆயத்தப்படுத்தும் வகையில் நெல்சன் கதை எழுதி வருகிறாராம். ஒரு பக்கம் பீஸ்ட் படத்தின் வேலைகள் மும்முரமாக நடக்கும் மறுபக்கம் ரஜினி படத்துக்கு கதை எழுத கவனம் செலுத்தி வருகிறாராம்.