அஜித் ரசிகர்களுக்கு வெளியான ஆறுதல் செய்தி.?

ajith9
ajith9

வெள்ளித்திரையில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியான வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் விடாமுயற்சியினால் பல திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ்நாட்டில் அதிகமான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் தான் தல அஜித்.

இவரது நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக தல அஜித் திரைப்படம் என்றால் மிக ஆவலுடன் திரையரங்குகளில் பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் வந்துவிடுவார்கள்.

இதனைத் தொடர்ந்து தல அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் 90 சதவீத காட்சி முடிந்த நிலையில் இன்னும் 10 சதவீத பட காட்சி மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கிறது.

இதனையடுத்து வலிமை திரைப்படத்தை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது அதில் இந்த திரைப்படத்தில் ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக எடுக்கப்பட உள்ளது அது மட்டும் முடிந்து விட்டால் முழு படமும் முடிந்து விடும் மேலும் விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தகவல் கசிந்துள்ளது.

ஆனால் இதனைப் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பது தான் தெரியவில்லை மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நாங்கள் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்கு மிக ஆவலுடன் இருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.

ajith45
ajith45

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்பது தெரியவில்லை இதனைப் பற்றியும் ரசிகர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவர வேண்டும் என கேட்டு வருகிறார்கள்.-