தமிழ்நாட்டு மக்களை படாதபாடு படுத்தி வரும் விஷயம் தான் கொரோனா இந்த தொற்று நோயால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் சமீபகாலமாக மறைந்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சினிமா துறையில் பணியாற்றி வரும் பல நடிகர்களை நாம் இழந்துவிட்டோம்.
தற்பொழுது இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு நாளுக்கு நாள் ஊரடங்கை புதுப்பித்துக் கொண்டே போகிறது அந்த வகையில் பார்த்தால் தமிழக அரசின் பேச்சை மக்கள்கள் கேட்பதே இல்லை என்றுதான் கூறவேண்டும் சும்மா சும்மா வெளியே வந்து காவல்துறை அதிகாரிகளை கோபப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
மேலும் கொரோனா தொற்று எங்களை விட்டு விலக வேண்டும் என மக்கள்கள் பலரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் கோவையில் உள்ள மக்கள் அதற்கும் ஒருபடி மேலாக கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என கொரோனா தேவி என்ற சிலையை வைத்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த சிலையின் மூலம் பல சர்ச்சைகள் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போதும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது ஆம் இந்த சிலை பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக பல நெட்டிசன்கள் புது புது மீம்ஸ்களை உருவாக்கி அதை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
அதேபோல் தற்பொழுதும் ஒருசில நெட்டிசன்கள் இந்த சிலை பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே அச்சு அசலாக இருக்கிறது என மீம்ஸ்களை உருவாக்கி அதனை அவருக்கே ஷேர் செய்து வருகிறார்களாம் ஆனால் இதனை பார்த்த வனிதா விஜயகுமார் மிகவும் கடுப்பாகி ஏன் எல்லாரும் எனக்கு இதை ஷேர் செய்கிறீர்கள் என பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் ஆத்திரமடைந்து ரசிகர்களிடம் கத்தி வருகிறாராம். மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் என்ன இப்படி செய்து கொண்டே போகிறார்கள் என கூறி வருகிறார்கள்.