அஜித்தின் அறிவுரை கேட்டு அந்த மாதிரி படங்களை இயக்குவதை விட்ட பிரபல இயக்குனர்.! யார் தெரியுமா அது.?

ajith

தமிழ் சினிமா உலகில் தன்னம்பிக்கை மூலம் உயர்ந்தவர் தான் தல அஜித் இவர் நிறைய திரைப்படங்களில் கஷ்டப்பட்டு நடித்து தற்பொழுது தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை அதிகமாக வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் பொதுவாகவே தன்னுடன் இருக்கும் நபர்களும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டும் குணம் உடையவர் அந்த வகையில் இளம் இயக்குனர் ஒருவர் தல அஜித்தை சந்தித்த பிறகு நான் இனிமேல் அந்த மாதிரி திரைப்படங்களை இயக்க மாட்டேன் என ரசிகர் ஒருவருடன் பகிர்ந்து கொண்ட தகவல் தான் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அஜித்தின் மிகவும் தீவிர ரசிகனான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதேபோல திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றும் பொழுது இவர் அஜித்தை சந்தித்த உடன் அவர் சொல்லிய கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு இனிமேல் ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படங்கள் தான் காதலை தேடி நித்யானந்தா, பஹீரா போன்ற திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இவர் அடல்ட் திரைப்படங்களை இயக்க மாட்டேன் என கூறி தற்பொழுது இந்த இரண்டு திரைப்படங்களும் அடல்ட் திரைப்படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

ajith2
ajith2

அதிலும் குறிப்பாக பஹீரா திரைப்படம் அந்தமாதிரிதான் இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் அஜித்திடம் அறிவுரை பெற்ற பிறகும் ஏன் இவர் இந்த வேலையை பார்த்து வருகிறார் என்பதுதான் தெரியவில்லை என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.