தல அஜித்தின் திரைப்பயணத்தில் அவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்றுதான் வரலாறு இந்த திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் பல விதமான கதாபாத்திரங்களில் அஜித் நடித்தாலும் இவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.
இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இந்த திரைப்படத்தை பற்றி நடன இயக்குனர் சிவசங்கர் பல விஷயங்களை ரசிகர்களுக்கு ஒரு பேட்டியில் கூறி உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அதில் அவர் கூறியது என்னவென்றால் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் வரலாறு படத்தில் சண்டைக் காட்சியுடன் சேர்த்து நடனமாடுவது போல் ஒரு காட்சியை எடுக்க என்னிடம் கேட்டார் அப்பொழுது தல அஜித் வித்தியாசமாக ஒரு சில காட்சிகளை செய்யுமாறு நான் செய்தேன் அதாவது அஜித் மிகவும் மெலிந்து இருந்ததை பார்த்த இவர் திடீரென்று நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்தாராம் நடன இயக்குனர் சிவசங்கர்.
குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் தல அஜித் நடித்த இந்த திரைப்படத்தில் தனது அம்மாவிடம் எனக்கு திருமணம் வேண்டாம் என சொல்லிக்கொண்டே வெற்றிலையை கிள்ளி தல அஜித் வாயில் போடுவது போல் ஒரு காட்சி இருக்கும் ஆனால் அந்த காட்சியை நடன இயக்குனர் சிவசங்கர் தல அஜித் இடம் கூறிய பொழுது இந்த காட்சியை வைத்தால் கண்டிப்பாக எனது ரசிகர்களுக்கு பிடிக்காது.
அது மட்டுமல்லாமல் இந்த காட்சியை எனக்கும் வராது வேறு ஏதாவது சொல்லிக் கொடுங்கள் என கேட்டுள்ளாராம்.ஆனால் அஜித்தை விடாமல் சிவசங்கர் நீங்கள் இந்த காட்சியில் நடிப்பது கடவுள் கொடுத்த வரம் இது போன்ற காட்சிகள் பல நடிகர்களுக்கும் அமையாது இதை மட்டும் நீங்கள் செய்யுங்கள் ரசிகர்கள் மத்தியில் படம் பலத்த வரவேற்பைப் பெறும் என கூறியுள்ளாராம்.