அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து வெளியான புதிய தகவல்.!

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் அஜித் குமார் அவர்கள் தற்போது இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்த உருவாகியுள்ளதாக சில தகவல்களும் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் அவர்கள் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. அதே தினத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் அவர்கள் நடித்து வரும் வாரிசு படத்திலிருந்து அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருந்த நிலையில் துணிவு படத்திலிருந்து ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. விஜய் நடித்துள்ள வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி கொண்டே இருந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டருக்கு எதிராக துணிவு திரைப்படத்திலிருந்து ஒரு மாஸ் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது விஜயின் வாரிசு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது அது மட்டும் அல்லாமல் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவும் அண்மையில் வெளியாகி நல்லா வரவேற்பு பெற்று வந்தது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது அதாவது துணிவு திரைப்படத்தில் இசையமைக்கும் ஜிப்ரான் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதாவது துணிவு திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை அனிருத் அவர்கள் பாடி முடித்துள்ளதாக கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் சில்லா சில்லா என்ற தொடக்கம் இந்த பாடல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் இந்த பாடலை பாடி முடித்தவுடன் இசையமைப்பாளர் அனிருத்தும் ஜிப்ராலும் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டு புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் ஜிப்ரான். தற்போது இந்த புகைபடம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைபடம்…