ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 3 படத்தில் நடித்த நடிகை தூக்கிட்டு தற்கொலை.! எந்த காரணத்தினால் தெரியுமா.?

தமிழ் திரையுலகில் நடனம் மூலம் மக்களை கவர்ந்த நடிகர் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான் இவரது நடனத்தை பார்க்கவே ரசிகர்கள் பலரும் மிக ஆவலாக இருப்பார்கள் அந்த அளவிற்கு ராகவா லாரன்ஸ் தனது நடனத்தை இயல்பாக வெளிபடுத்தி வருகிறார் இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவதால்.

இவரது நடிப்பில் மீண்டும் எப்பொழுது திரைப்படம் உருவாகும் என எதிர்பார்த்து வருகிறார்கள்.இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் காஞ்சனா 3 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இதில் ராகவா லாரன்ஸ் பிளாஷ்பேக் சொல்லும் பொழுது அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் Alexandra Djavi.இவரைப் பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

அதுமட்டுமல்லாமல் இவரது வீட்டின் எதிர் புறம் வசித்து வந்த நபர்களை காவல்துறையினர் விசாரித்த பொழுது அவரின் காதலர் சில தினங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்ததாகவும் இதனால் மன அழுத்தத்தில் Alexandra Djavi இருந்ததாகவும் காவல்துறையினரிடம் கூறி உள்ளார்கள்.

Alexandra Djavi
Alexandra Djavi

மேலும் இவரது இழப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவரது நடிப்பு காஞ்சனா3 படத்தில் நன்றாக இருந்தது ஆனால் இவர் எதற்காக அப்படி செய்தார் என்பது தெரியவில்லை என கூறி வருகிறார்கள்.