சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தனது கடின உழைப்பினால் மாறிய நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்களை கவர்ந்து பின்பு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வரும் பல நடிகர்களுடன் நண்பனாக நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.
ஒரு கட்டத்தில் இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தொடர்ச்சியாக தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவரது நடிப்பில் வெளியான ரஜினிமுருகன்,வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ஹீரோ,மிஸ்டர் லோக்கல் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கிறது இந்நிலையில் சிவகார்த்திகேயன் செய்த விஷயத்தைப் பற்றி புதிதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
ஆம் நடிகர் சிவகார்த்திகேயன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து ஆண் சிங்கம் மற்றும் பெண் யானையை தத்தெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும் மற்றும் ப்ரக்ரிதி என்ற பெண் யானையும் ஆறு மாதத்திற்கு சிவகார்த்திகேயன் தத்தெடுத்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஆண் சிங்கத்திற்கும் மற்றும் பெண் சிங்கத்திற்கு தேவைப்படும் பொழுது உணவு மற்றும் பராமரிப்பிற்கும் அவர் உதவ உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது ஏற்கனவே சிவகார்த்திகேயன் அணு என்ற பெண் புலியை கடந்த 2018 இல் இருந்து 2020 வரை தத்தெடுத்து இருந்தார்.
என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.இந்நிலையில் இவர் இப்படி ஒரு விஷயத்தை செய்யும் தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.