பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஷகிலா இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சி நடிகையாக நடித்தாலும் இவரது திரைப்படங்களை பார்ப்பதற்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் நடிகை ஷகிலா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.
என்றுதான் கூறவேண்டும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து கொண்டே போகிறது எனவும் தகவல் வைரலாகி வருகிறது.பொதுவாகவே நடிகை ஷகிலா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படையாக பேசி விடுவார்.
அதிலும் குறிப்பாக இவர் பல மேடைகளில் பல பேட்டிகளில் கற்பழிப்பவர்களைப் பற்றி தான் அதிகமாக பேசுவார் இதுபோன்ற தவறுகளை செய்யும் நபர்களுக்கு தண்டனை அதிகப்படியாக இருக்கும் வேண்டும் இனிமேல் இந்த மாதிரி தவறு செய்யக் கூட பலரும் யோசிக்க வேண்டும் என பல சமுதாய கருத்துகளை மக்களுக்கு தெரிவிப்பார்.
அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் கூட உச்சம் படத்தின் பிரஸ்மீட்டில் படத்தில் நடித்த அனைத்து நபர்களையும் பாராட்டி பேசினார் ஆம் மேலும் அந்தபடத்தில் அவர் எப்படி பணியாற்றினார் என்பது பற்றியும் பேசினாராம் குறிப்பாக கற்பழிப்பவர்களை கல்ப் போன்ற நாடுகளில் கொடுக்கப்படும் கடுமையான தண்டனை போல் நமது நாட்டிலும் இருக்க வேண்டுமெனவும் கூறினாராம்.
மேலும் இவர் கூறிய தகவலை கேட்ட ஒரு சில நெட்டிசன்கள் இவர் பேசுவது நியாயம் தானா இவரே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் இவர் எப்படி இது போன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு வந்துவிடுகிறார் என்பது பற்றி எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என ஷகிலாவை திட்டும் வகையில் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.