சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து ஒரு மாதம் மேல் ஆகிறது மேலும் அவரைப் பற்றி நாள்தோறும் ஒரு திடுக்கிடும் தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
அதே போல் தற்போதும் ஒரு திடுக்கிடும் தகவல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அந்த தகவல் என்னவென்றால் சித்ராவின் ஹேண்ட் பேக்கை ஆய்வு செய்த காவல்துறையினர் அதிலிரந்து 150 கிராம் கஞ்சாவும் அதை சிகரெட்டில் லோடு செய்யும் கருவியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சித்ராவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது கஞ்சா பழக்கமும் சித்ராவுக்கு உள்ளது என இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தற்போது இந்த தகவல் சித்ராவின் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சித்ராவுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கிறதா என சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.