லோகேஷுக்கு அடித்த ஜாக்பாட்.. ரஜினி எடுத்த அதிரடி முடிவு.? சம்பள விஷயத்தில் இவ்வளவு இறங்கி வந்து விட்டாரா.?

rajni
rajni

பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்து கொண்ட நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் சமீப காலமாக இவர் நல்ல கதைய அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் தற்பொழுது நடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு பின்பு லால் சலாம் திரைப்படத்திலும் மற்றும் தலைவர் 170 ஆகிய படங்களிலும் நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படங்களை எல்லாம் முடித்த பிறகு இயக்குனர் லோகேஷ் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்க போவதாகவும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து பார்த்தால் தலைவர் 171 படத்திற்கான சம்பளம் பற்றி தற்பொழுது ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.115 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம் மேலும் இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் ரஜினியின் சம்பளம் மிகவும் குறைவாக இருக்கிறது என கேள்வி எழுப்பி வரலாம் ஆனால் ரஜினிகாந்த் தன்னுடைய ஹிட் அடித்த திரைப்படங்களைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக சம்பளத்தை பற்றி அவர் கவலைப்படவே இல்லையாம்.

rajini
rajini

இந்தத் திரைப்படத்தை இயக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.40 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் இந்த தகவல் வெளியாகி உள்ளது இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் பலரும் இதை தான் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.