சிறு வயது குந்தவையாக பொன்னியின் செல்வனில் நடித்தது இந்த பிரபலங்களின் மகளா.! அட இது தெரியாம போச்சே..

trisha
trisha

தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்த பல பிரபலங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இதில் நடித்த விக்ரம்,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய்,கார்த்தி,ஜெயம் ரவி உட்பட பல பிரபலங்களும் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தங்களது விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.மேலும் முதல் பாகத்தின் வசூலை இந்த இரண்டாம் பாகம் முறியடிக்குமா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் அதிகமாக வசூல் வேட்டையில் வசூல் செய்து வருகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த கதாபாத்திரமாக இருந்த கதாபாத்திரம் தான் நடிகை த்ரிஷா நடித்த குந்தவை. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்திலும் இவரது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது அதேபோல் தற்பொழுது இரண்டாம் பாகத்திலும் இவரது நடிப்பை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் குந்தவை கதாபாத்திரத்தில் சிறு வயது குந்தவையாக நடித்த பிரபலத்தை பற்றி தான் நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம். அதாவது இந்த சிறு வயது குந்தவையாக நடித்தவர் நிலா என்பவர் இவர் பிரபல நடிகை கவிதா பாரதி மற்றும் நடிகர் கன்யா பாரதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை உறுதி செய்யும் வகையில் தற்பொழுது இவர்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

nilaa
nilaa

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு நல்ல திறமை இருக்கிறது சிறுவயதிலேயே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர் விரைவில் நிறைய திரைப்படங்களில் நடிக்க இவருக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

nila
nila