தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை நயன்தாரா இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவ்வாறு நடித்து வந்த நயன்தாராவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது ஒரு கட்டத்தில் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் கொடுத்துவிட்டார்கள் மேலும் நயன்தாரா நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் நெற்றிக்கண் இந்த திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள் மூக்குத்தி அம்மன் போலவே இந்த திரைப்படமும் நேரடியாக பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என தகவல் வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த படம் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாக உள்ளதாம்.
இந்த திரைப்படத்தைப் பற்றி விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் கழித்து இவர் இந்தத் திரைப்படத்திற்காக ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளாராம் அதில் நயன்தாராவிற்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்பது தெரியவந்தது அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியான முதல் ப்ரோமோவில் நாம் பார்த்திருக்கலாம்.
அதேபோல தற்பொழுது இந்த நிகழ்ச்சியிலிருந்து அடுத்ததாக வெளியாக உள்ள ப்ரோமோவில் நயன்தாரா தனது தந்தையாருக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கடந்த 13 வருடங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கண்கலங்கி பேசியதாக கூறப்படுகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நயன்தாராவிற்கு இப்படி ஒரு சோகம் இருக்கிறதா எங்களுக்கு தெரியவில்லை என கூறி வருகிறார்கள்.