தனது திரைப்படங்கள் வித்தியாசமான முறையில் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதால் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு வரும் இயக்குனர் தான் மிஸ்கின் இவர் இயக்கும் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து விடும் அந்த அளவிற்கு தனது கதையை வித்தியாசமான முறையில் எழுதி இருப்பார்
மேலும் இவர் இறுதியாக இயக்கிய திரைப்படம் தான் சைக்கோ இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரது ரசிகர்கள் பலரும் நீங்கள் எப்போது துப்பறிவாளன்2 திரைப்படத்தை இயக்க போகிறீர்கள் என கேட்டு வருகிறார்கள்.
ஆனால் துப்பறிவாளன் 2 திரைப்படம் ஒரு சில காரணங்கள் குறித்து பிரச்சனையில் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு தெரியாத ஒன்றாகும் மேலும் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் யுத்தம் செய் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடம் வெற்றிக்கான வைத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த சேரன்,லட்சுமிராமகிருஷ்ணன்,ஜெயப் பிரகாஷ் போன்ற பலரும் ரசிகர்களிடையே பிரபலம் ஆகி விட்டார்கள்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க நடிக்க இருந்தவர் தான் நதியா மிஸ்கின் இந்த கதாபாத்திரத்திற்காக நதியாவை மொட்டை அடிக்க சொன்னதால் அவர் இந்த படம் வேண்டாம் என சொல்லி பின்பு கவலைப்பட்டாராம் என்று தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மொட்டை அடிப்பதற்கு யோசித்துக்கொண்டு நல்ல ஹிட்டடித்த படத்தை விட்டு விட்டீர்களே என கூறி வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நதியாவின் அழகு அவரது கூந்தல் தான் அவரை மொட்டை அடிக்கச் சொன்னால் எப்படி என கிண்டலாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.