அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவில் வலம் வந்த பல நடிகர்களின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படங்களை பார்த்து தான் மகள்கள் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தனது திறமையால் தமிழ்நாட்டு மக்களை அதிகம் கவர்ந்த நடிகர் என்றால் அது எம்.ஜி.ஆர் தான் இவரது காலத்தில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நன்றாக வசூல் செய்திருக்கும்.
இவர் நடித்த திரைப்படங்கள் தற்பொழுதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது எம்.ஜி.ஆர் எந்த அளவிற்கு மக்களை சேர்த்தாரோ அதே அளவிற்கு வில்லனாக நடித்து மக்களை கவர்ந்த நடிகர் தான் நம்பியார் இவர் வில்லன் கதாபாத்திரத்தை கொண்டு பல திரைப்படங்களில் நடித்து வந்ததால் இவருக்கு வில்லனாகவே நடிக்கும் வாய்ப்பு ஒவ்வொரு திரைப்படத்திலும் கிடைத்து வந்தது அந்த வகையில் இவர் வில்லனாக நடித்து மக்களை அதிகமாக கவர்ந்து விட்டார்.
அதேபோல் எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவால் இந்த மண்ணை விட்டு பிரிந்தார் எம்.ஜி.ஆர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பல சினிமா பிரபலங்களும் வந்திருந்தார்கள் ஆனால் நடிகர் நம்பியார் அவரது மறைவிற்கு வரவில்லையாம் என்ன காரணம் என்று கேட்டால் அப்பொழுது நம்பியார் கடவுளுக்கு மாலை போட்டிருந்ததால் எம்.ஜிஆரின் மறைவிற்கு வரமுடியவில்லை என இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் நம்பியார் உடல் நலக்குறைவால் மறைந்த பொழுது இவரது மறைவிற்கு பல சினிமா பிரபலங்களும் வந்திருந்தார்கள் அதேபோல் எம்ஜிஆருடன் பல திரைப்படங்களில் மற்றும் பல பாடல்களில் நடித்த ஜெ ஜெயலலிதா அவர்கள் நம்பியாரின் மறைவிற்கு வந்துள்ளாராம்.ஜெயலலிதா எம்ஜிஆருடன் கட்சியில் பணியாற்றியவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
நம்பியார் உண்மையாகவே திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் கதாபாத்திரத்தை கொண்டு நடிப்பார் ஆனால் அவர் வெளியில் மிகவும் நல்லவராம் கஷ்டப்படும் மக்களுக்கு இவர் நிறைய உதவிகளை செய்ததாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.