சித்ரா தற்கொலையில் ஹேமந்த் மீண்டும் கைது.! விசாரணையில் வெளியானது பரபரப்பு தகவல்.?

Hemmanth
Hemmanth

கடந்த வருடம் சினிமாவில் உள்ள பல பிரபலங்களை ரசிகர்கள் இழந்து விட்டார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மிகவும் வருந்தும் அளவிற்கு இந்த உலகைவிட்டு மறைந்தவர் தான் சித்ரா இவர் தொகுப்பாளினியாக  பல நிகழ்ச்சிகளை தொகுத்து பின் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தார்.

தனது வருங்கால கணவருடன் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த இவர் ஒரு சில பிரச்சனைகளால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும் அவரது இழப்பு தாங்க முடியாமல் அவருடன் பணியாற்றி வந்த நண்பர்கள்,உறவினர்கள் எல்லாம் தனது உடன் இருந்த புகைப்படம்,வீடியோக்கள் மூலம் தனது வருத்தத்தை தெரிவித்து வந்தார்கள்.

இதனையடுத்து சித்ராவின் தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பலரும் கூறி வந்த நிலையில் ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

மேலும் அவரிடம் விசாரித்தபோது பல உண்மைகள் வெளி வந்தது என சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியது.

இந்நிலையில் மறுபடியும் அவரை பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த தகவல் என்னவென்றால் ஹேம்நாத் பலரிடம் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக அதிகம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளாராம்.

அவரால் பாதிக்கப்பட்ட பலரும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்கள்.அதன் அடிப்படையில் ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள் என்று இணையதளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

hemnath
hemnath