Leo Harold Das: லியோ படத்தில் அர்ஜுன் நடித்திருக்கும் ஹரோல்டு தாஸ் லுக்கை நேற்று படக்குழு சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில் ரசிகர்களை பெரிதளவிலும் கவிர்த்துள்ளது. இதனைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அப்படியே வைத்திருப்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
எனவே சூர்யா ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்கள் ரோலக்ஸ் அப்பாவே ஹரோல்டு தாஸ் தான் என பெரிய குண்டை தூக்கி போட்டு உள்ளனர். லியோ படத்தின் கதை என்னவென்று தெரியாமல் இருந்து வரும் நிலையில் அதற்குள் இப்படி ஒரு உருட்டை சோசியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம் போன்ற படங்களை அடுத்து விஜய்யின் லியோ படத்தினை இயக்கி வருகிறார். இந்த படம் எல்சியூ தான் என்றும் எனவே விக்ரம் படத்தில் நடித்த பலரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்கள். அப்படி பகத் பாஸில், கமல், சூர்யா என அனைவரும் கிளைமாக்சில் வருவார்கள் என ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அர்ஜுனின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ஹரோல்டு தாஸ் கிளிம்ஸ் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்த நிலையில் இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார். எனவே ரோலக்ஸ் சூர்யாவின் காட்சிகளை காப்பியடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதாகவும், ஒரே ரோலக்ஸ் எங்க சூர்யா தான் என்றும் லோகேஷ் கனகராஜ் நினைத்தாலும் இப்படி ஒரு கேரக்டரை இனிமேல் உருவாக்க முடியாது எனவும் கூறி வருகின்றார்கள்.
இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் ரோலக்ஸ் அப்பாவே அர்ஜுன் நடித்துள்ள ஹரால்டு தாஸ் தான் என புதிய கதையை உருட்டி உள்ளார்கள். எனவே இவ்வாறு இவர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர். ரோலக்ஸ் தாஸ் என்பதுதான் அவரது முழு பெயர் என்றும் சஞ்சய் தத் அர்ஜுனின் தம்பி லியோ தாஸ் என்றும் இந்த படம் விக்ரம் படத்தின் ப்ரீக்வெல் என ஏகப்பட்ட கதைகளை கூறி வருகின்றனர்.