நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்ட வசனம்.! புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

வெள்ளித்திரையில் மக்களால் ரசிக்கப்பட்டு வந்த பல நடிகர்களும் தற்போது சினிமாவை விட்டு மறைந்து விட்டார்கள் உதாரணத்திற்கு சின்ன கலைவாணர் விவேக்கில் இருந்து பல பிரபலங்களும் தமிழ் சினிமாவை விட்டு மறைந்துவிட்டார்கள் அந்த வகையில் தற்போது உள்ள காமெடி நடிகர்களுக்கு எல்லாம் குருவாக விளங்கிய நடிகர் தான் குமரிமுத்து.

இவர் அந்தக் காலத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் பார்த்தால் இவர் பெரும்பாலும் இவரது சிரிப்பை வைத்து தான் மக்களை கவர்ந்துள்ளார் என்பதும் நமக்குத் தெரிந்த விஷயம் தான்.இவர் நடித்த திரைப்படங்களை மக்களால் தற்பொழுது வரை மறக்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும்.

மேலும் இவர் மறைந்த பிறகும் இவர் நடித்த திரைப்படங்கள் தற்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது இதனை மக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.மேலும் நடிகர் குமரிமுத்து அதிகமாக இயக்குனர் மகேந்திரன் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இயக்குனர் அனீஸ் இயக்குனர் மகேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டாராம்.

அப்பொழுது இவர் ஒரு விஷயத்தை பார்த்து தன் முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறாராம்.இயக்குனர் மகேந்திரனின் அடக்க ஊர்வலத்தில் கலந்து கொண்ட இவர் எல்லாருக்கும் முன்பே அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று விடுவாராம் அங்கு சென்று பிரபலங்களின் கல்லறையில் எழுதப்பட்ட வசனங்களை பார்ப்பாராம்.

அந்த வகையில் மகேந்திரனின் அஞ்சலிக்காக சென்ற போதுதான் இவர் நடிகர் குமரிமுத்துவின் கல்லறையும் பார்த்து உள்ளாராம் அப்போது நடிகர் குமரிமுத்து கல்லறையில் எழுதப்பட்ட வசனம் இவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம் ஆம் நடிகர் குமரிமுத்துவின் வாரிசுகள் இவரது கல்லறையில் it is the time for the god. to enjoy his laughter’ அதுக்கு அர்த்தம் என்னவென்றால் எங்களை தேவையான அளவுக்கு ரொம்ப சிரிக்க வச்சிட்டாரு ஆண்டவரே இது உங்க டைம் நீங்க இப்ப அனுபவிங்க என்று இவரது வாரிசுகள் அவரது கல்லறையில் எழுதியுள்ளார்கள்.