சின்னத்திரையில் தொகுப்பாளினி,சீரியல் நடிகை என பல திறமைகளைக் கொண்டு வளம் வந்தவர் தான் சித்ரா இவர் சென்ற வருடம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது இறப்பிற்கு ஹேம்நாத் தான் காரணம் என பலரும் கூறி வந்த நிலையில் ஹேம்நாத்தை காவல்துறையினர் சிறையில் அடைத்து விசாரணையில் வைத்திருந்தனர்.அவரை விசாரித்த போது பல உண்மைகள் வெளிவந்தது என சமீபத்தில் தான் பல தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
மேலும் சித்ராவின் தற்கொலையை பற்றி அவருடன் பழகி வந்த நண்பர்கள் உறவினர்கள் என பலரிடமும் விசாரித்த பொழுது பல தகவல்கள் வெளிவந்ததை நாம் பார்த்தோம்.
இந்நிலையில் சித்ராவின் இறப்பு குறித்து ஜெயஸ்ரீ பாலன் என்ற ஒரு பெண் ஜோதிடர் பரபரப்பு தகவல்களை இணைய தளத்தில் பகிர்ந்துள்ளாராம்.
அதில் சித்ரா மே மாதம் 2ஆம் தேதி 1992 ஆம் ஆண்டு 5.15 மணிக்கு பிறந்துள்ளாராம் அவர் இயல்பாகவே நல்ல திறமையும் துணிச்சலையும் கொண்டவராம்.
இவர் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை ஹேம்நாத் பிடிங்கி விடுவார் என்ற பயத்தில் சித்ரா கணவரை எப்படியாவது பயமுறுத்த வேண்டும் என்பதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் முடிவு செய்துள்ளாராம்.
ஆனால் அவரது விளையாட்டான முடிவு விபரீதமாக போய்விட்டது என்று அந்தப் பெண் ஜோதிடர் கூறியதாக இணையதளத்தில் இந்த தகவல் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அவரது மரணத்திற்கு கணவர் ஹேம்நாத் காரணமாக இருக்க முடியாது எனவும் கூறியுள்ளாராம்.