என்னதான் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் நடிகைகளின் வாழ்க்கையில் புகுந்து விளையாடிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஆர்யா இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று விட்டது.
இவர் தனது சினிமா பயணம் தொடங்கும் பொழுது தனது உடன் நடித்து வந்த நடிகைகளுடன் மிகவும் கிசுகிசுக்கப்பட்டார் அதிலும் குறிப்பாக இவர் தனது உடன் நடித்து வந்த ஒருசில நடிகைகளுடன் காதலித்து திருமணம் வரை சென்ற விஷயமெல்லாம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியதை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் நடிகர் ஆர்யா சமீபத்தில் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது இந்நிலையில் ஆர்யா காதலித்து திருமணம் வரை சென்று பின்பு கைவிடப்பட்ட நடிகைகளைப் பற்றி தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நிலா என்ற பெயரில் வலம் வந்த நடிகையை அனைவருக்கும் தெரியும் ஆனால் இவருடைய உண்மையான பெயர் மீரா சோப்ரா இவரும் ஆர்யாவும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள் ஒரு கட்டத்தில் இவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளலாம் என ஞானம் பிறந்து திருமணம் வரை சென்ற நேரத்தில் ஒரு சில காரணங்கள் குறித்து இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இதனை தொடர்ந்தும் நடிகர் ஆர்யா தன்னுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை பூஜாவை காதலித்து வந்தாராம் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் பல காரணங்கள் குறித்து இவருடன் இருந்த காதலையும் ஆர்யா முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் கலர்ஸ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் வெற்றி பெறும் பெண்ணை நான் திருமணம் செய்யப்போவதாக ஆர்யா கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது அதேபோல் அந்த நிகழ்ச்சியில் அபர்னதி என்ற பெண் ஆர்யாவை மிகவும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தாராம் இருவரும் பழகி வந்த நேரத்தில் அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தப் பெண்மணிக்கு ஆர்யா டாட்டா சொல்லி போய் விட்டாராம்.

இதனைத்தொடர்ந்து தான் நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வரும் நேரத்தில் இவரது பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தும் வகையில் இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இதைதான் பல பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.