Vidaamuyarchi Movie: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருந்து வரும் அஜித்தின் நடிப்பில் விரைவில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக இருக்கிறது.
இதற்கு முன்பு இவருடைய நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியானது. துணிவு படத்தினை எச் வினோத் இயக்க பாக்ஸ் ஆபீஸ் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தினை தொடர்ந்து தனது 68வது திரைப்படத்தில் கமிட் ஆகியினார்.
அஜித் நடிக்க இருக்கும் தல68 படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிறகு விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதமே விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆனால் தற்பொழுது வரையிலும் தொடங்கவில்லை.
அந்த வகையில் தற்பொழுது வரையிலும் விடாமுயற்சி என்ற டைட்டில் அப்டேட் மட்டுமே வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருவதனால் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் ஷூட்டிங் தொடங்கும் என சமீபத்தில் அறிவித்திருந்தார் எனவே ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது விடாமுயற்சி படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி கதை ஹாலிவுட் படத்தின் கதையை காப்பி என்று கூறப்படுகிறது. அதாவது, கர்ட்ரஸ்ஸல் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் பிரேக்டவுன். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த காரணத்தினால் இந்த படத்தின் கதையை தழுவி தான் விடாமுயற்சி படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே மகிழ் திருமேனி சொன்ன கதைக்கு அஜித் ஓகே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தனக்கேற்றவாறு கதையை உருவாக்க வேண்டும் என மகிழ் திருமேனியிடம் கூறியுள்ளாராம் அஜித். இவ்வாறு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வர எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.