தமிழ் திரை உலகில் தனது ஆரம்ப காலகட்ட திரைப்பயணத்தில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து அதன் பின்பு நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும்,தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் சேர்த்த நடிகர் தான் நடிகர் அஜித். இவர் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து அதன் பின்பு தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
மேலும் இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் வில்லன் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.மேலும் இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் குட்டி அஜித்தாக சிவா விஷ்ணு ரோலில் நடித்தவர்கள் தான் தினேஷ் ஷா,நரேஷ் ஷா இதில் மாற்றுத்திறனாளியாக விஷ்ணு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நரேஷ்.
தம்பியாக சிவா கதாபாத்திரத்தில் நடித்தவர் தினேஷ் இதனைத்தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் கழித்து வில்லன் படத்தில் நடித்த இவர்கள் இருவரும் அளித்துள்ள பேட்டியில் வில்லன் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது எப்படி நடித்தார்கள் என சுவாரசியமான தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்கள்.அதில் யார் அண்ணன் யார் தம்பி என்று இயக்குனர் கேட்டாராம் அதற்கு நான் அண்ணன் இவன் தம்பி என சொன்னேன் பின் அவர்கள் என்னை கோட் சூட் போட்டு வர சொன்னார்கள்.
அப்படியே நாங்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அதையும் சில காட்சிகள் எடுத்து விட்டார்கள். அதற்குப் பிறகுதான் எங்களது கதாபாத்திரம் என்ன என்பதை சொன்னார்கள். அதிலும் குறிப்பாக அஜித் சார் படம் என்பதால் அந்த காலத்தில் மொபைல் போன் எல்லாம் எதுவும் கிடையாது கேமரா மேனை அழைத்து அவரிடம் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம் இந்த போட்டோவை நாங்கள் எங்கள் வீட்டில் பிரேம் பண்ணி வைத்திருக்கிறோம் அது மட்டுமல்லாமல் நடிகர் அஜித் இடம் ஆட்டோகிராப் வாங்கி இருப்பதை கூட பத்திரமாக லேமினேஷன் போட்டு வைத்திருக்கிறோம்
மேலும் அதில் பேசிய இவர்கள் ஒரு காட்சியில் விஷ்ணுவை ரவுடிகள் அடித்து காலை உடைத்து விடுவார்கள். அப்பொழுது அவனை பார்த்து நான் நன்றாக அழுக வேண்டும் ஆனால் எனக்கு சரியாக அழத் தெரியவில்லை ரெண்டு மூணு டேட் வாங்கியும் எனக்கு சரியாக இந்த காட்சி அமையவில்லை என்ற காரணத்தினால் உடனே இயக்குனர் என்னை அழைத்து பளார் பளார் என்று மூன்று ஆரைவிட்டார் நான் அழவேண்டும் என்பதற்காக அப்பொழுது அவர் செய்துள்ளார்.
ஆனால் அது எனக்கு தெரியவில்லை மற்றவர்கள் முன்னாடி அழுதால் அவமானமாக இருக்கும் என்று நினைத்து அளவே இல்லை பின்பு எப்படியோ அந்தக் காட்சியில் நடித்து முடித்து விட்டேன்.அதன் பின்பு இயக்குனர் என்னை அழைத்து மன்னித்து விடப்பா நீ இந்த காட்சியில் சரியாக நடிக்க வேண்டும் என்பதால் தான் நான் அப்படி செய்தேன் என்று சொன்னார்.
அப்பொழுதுதான் நான் பயங்கரமாக தேம்பி தேம்பி அழுதேன் என அந்தப் பேட்டியில் இருவர்களும் தாங்கள் கற்றுக் கொண்டதை சொன்னார்களாம் மேலும் அந்த பேட்டியில் சிவா என்ற நான் தளபதி ஃபேன் விஷ்ணு தல ரசிகன் என்று பல சுவாரசியமான தகவல்களை ரசிகர்களுக்கு சொன்னதாக தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.