விருமன் திரைப்படத்தின் மூலம் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லப்போகும் அதிதி ஷங்கர்.! இவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா.?

shankar

வெள்ளித்திரையில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களை வைத்து பல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்த இயக்குனர் தான் ஷங்கர் இவரது  இயக்கத்தில் பல திரைப்படங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு தருவார்கள் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறுகிறது.

அந்த வகையில் பார்த்தால் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் கூடிய சீக்கிரம் நடைபெறும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் ஷங்கர் இந்தியன்2 திரைப்படத்தை எடுக்காமல் மற்ற திரைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த லைக்கா நிறுவனம் இந்தியன்2 திரைப்படத்தை முடிக்காமல் ஷங்கர் எந்த திரைப்படத்தையும் இயக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தார்கள்.ஆனால் தற்போது இரு தரப்பில் உள்ள பிரபலங்களும் பேசி ஒரு நல்ல வழியை தேர்ந்தெடுத்து உள்ளார்களாம்.

மேலும் இவரை போலவே இவரது மகள் அதிதி ஷங்கரும் தற்போது சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார் இவர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க களமிறங்குகிறார் இந்த திரைப்படம் மட்டும் இவருக்கு நன்றாக கை கொடுத்து விட்டால் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பாராம்.

viruman
viruman

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி சித்ரா லட்சுமணனிடம் போன் மூலம் அதிதி ஷங்கரை பற்றி பேசியுள்ளாராம் அதில் ஷங்கர் போலவே இவரும் ஒரு புத்திசாலி திறமை உடையவர் இவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் உடனே நடித்து விடுவார்.அந்த அளவிற்கு இவரிடம் நிறைய திறமைகள் ஒளிந்து கொண்டு இருக்கிறது என கூறியுள்ளாராம்.விருமன் திரைப்படம் கண்டிப்பாக இவருக்கு நல்ல வரவேற்பை பெறும் இந்த திரைப்படத்தில் இவர் அனைத்து காட்சிகளிலும் பட்டையை கிளப்பி விடுவார் என்று கூறியுள்ளதாக இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.