அந்த காலகட்டத்தில் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்த நடிகர்களில் ஒருவர் தான் சரத்குமார் இவரது நடிப்பில் அந்த காலத்தில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அந்த வகையில் பார்த்தால் சரத்குமார் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் ஒன்று தான் சூரிய வம்சம் இந்த திரைப்படம் 90ன் காலத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக தற்பொழுது வரை அமைந்து வருகிறது.
மேலும் இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் சரத்குமார் நடிப்பை பாராட்டியதுமட்டுமல்லாமல் இதில் காமெடி நாயகனாக நடித்த மணிவண்ணனை மிகவும் ரசிகர்கள் பாராட்டினார்கள் அந்த அளவிற்கு இவர் இந்த திரைப்படத்தில் செய்யாத அட்டகாசங்களே இல்லை என்ற அளவிற்கு போய்விட்டது.
மேலும் இந்த திரைப்படத்தில் மணிவண்ணன் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு நபரைக் கூப்பிட்டு அண்ணா நல்லா இருக்கீங்களா என பேசி இருப்பார் அப்பொழுது அந்த நபர் யார் என்று தெரியாமல் மிகவும் குழம்பி பேருந்தில் சென்று விடுவார். அந்த நபர் தான் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார் இவரைப் பற்றிதான் நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம்.
ஆம் அந்த நபர் வேறு யாரும் இல்லை தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப் படங்களை கைப்பற்றி வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வேல ராமமூர்த்தி நடிகர் தான் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சேதுபதி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதனைத் தொடர்ந்து இந்தத் திரைப்படம் அவருக்கு நன்றாக கை கொடுத்து விட்டதால்.
தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி திரைப்படத்தில் மிகவும் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார்.இவர் தான் அப்பொழுது சூரியவம்சம் திரைப்படத்தில் பேருந்தில் செல்லும் நபர் அப்பொழுது பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் இருந்த இவர் தற்போது பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவது ரசிகர்களுக்கு தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர் பலரும் தற்போது இவர் தானா அவர் என ஆச்சரிய பட்டு இந்த தகவலை பார்த்து வருகிறார்கள்.