உன் படமா என் படமா பார்த்திரலாம்.. கமல்ஹாசன் உடன் மல்லு கட்டிய சுந்தர்ராஜன்.?

kamal

தமிழ் சினிமாவில் தற்பொழுது நிறைய இயக்குனர்கள் தங்களது திரைப்படம் மக்களிடையே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களாக கொடுத்து வருகிறார்கள். ஆனால் 80 காலகட்டங்களில் பல இயக்குனர்களும் சோகமாக முடிவது போல் இறுதி கட்டத்தை முடித்திருப்பார்கள். அதே போல் பல இயக்குனர்களும் சோகமான கதைகளம் கொண்ட திரைப்படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி கண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் சோகமான முடிவுகள் இருக்கும் திரைப்படங்களில் நடித்துள்ளவர்தான் கமல்ஹாசன் இவர் வாழ்வே மாயம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார் 1982 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த திரைப்படம் வெளியானது. கண்டிப்பாக கமல்ஹாசன் படம் என்பதால் படம் நிறைய நாட்கள் ஓடி சாதனை படைக்கும் என பட குழு நம்பினார்களாம். ஆனால் இதே கதைகளத்தில் இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை திரைப்படமும் அதே வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் வெளியானது.

கமல் நடித்த வாழ்வே மாயம் திரைப்படத்தை விட ஒரு மாதம் கழித்து தான் இந்த திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே இதில் வரும் பாடல்கள் அனைத்தும் மக்களை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக இந்த திரைப்படம் பிப்ரவரியில் வெளியானாலும் கிட்டத்தட்ட 450 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டே இருந்ததாம்.

இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்களில் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்ததாம். ஆனால் இவரை பலரும் காமெடி நடிகராக தான் பார்த்திருப்பார்கள் அதையும் தாண்டி இவர் தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

sundar rajan
sundar rajan

மேலும் கமல் நடிப்பில் வெளியான வாழ்வே மாயம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும் பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் அதிக நாட்கள் ஓடி உள்ளதாம். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே ஒரே கதை களத்தில் உருவான திரைப்படங்களாக அமைந்துவிட்டதாம்.