கமல் எடுக்கும் புதிய அவதாரம் – கல்லாபெட்டியை நிரப்ப இதுதான் ஒரே வழி.? வியப்பில் டாப் நடிகர்கள்.!

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் தொடர்ந்து சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டு திகழ்ந்து வந்தவர். இடையில் சில ஆண்டுகளாக அரசியல் பிக்பாஸ் நிகழ்ச்சி போன்ற பலவற்றிலும் கவனம் செலுத்தி வந்ததால் சினிமாவில் அவரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் இருந்தார்.

பின்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் நடித்திருந்தார் இந்த படம் அண்மையில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்று நல்ல வசூலை அள்ளி ஓடிக்கொண்duw இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து முழு நேர சினிமாவில் இறங்கி விட்டார் கமல்.

ஆகையால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் அந்த வகையில் இந்தியன் 2 தேவர்மகன்-2 போன்ற இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிய நிலையில் தற்போது அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் வரிசைகட்டி நிற்கிறது. இந்நிலையில் கமல் அடுத்து நடிக்க உள்ள படங்களில் சில கண்டிஷன்கள் போட்டு வருகிறாராம்.

அடுத்து அவர் நடிக்கும் படங்கள் இந்திய அளவில் தான் உருவாக வேண்டும் என்பதை அழுத்தமாக கூறுகிறாராம். மேலும் இந்த படங்களில் அவருடன் நடித்த பகத் பாசில், விஜய்சேதுபதி போன்றவர்களை தற்போது மிகவும் பிடித்துள்ளதால் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களில் அவர்களை நடிக்க வைப்பார் என்பதும் தெரிய வருகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தில் கூட கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி தான் நடிக்க உள்ளார் என்ற தகவல் கூட அண்மையில் வெளி வந்தது. இந்தியன் 2 தேவர்மகன் 2 ஆகிய இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்த அடுத்த படங்களில் நடிப்பார் என தெரியவருகிறது மேலும் மகேஷ்  நாராயணனுடன் இணையும்  படத்திற்கு கமல் தான் முழு ஸ்கிரிப்டையும் எழுதினார் என்பதும் கூறப்படுகின்றன.