தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பு வருகிறார் அதனால் அவரது படங்களும் வெற்றி படங்களாக மாறுகின்றன அந்த வகையில் மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார் ஐசரி கணேஷ் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருந்தார் படம் ஒரு வழியாக கடந்த செப்டம்பர் மாதம் 15 தேதி திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆனது ஆரம்பத்திலேயே நல்ல விமர்சனத்தை இந்த படம் பெற்றதன் காரணமாக இந்த படத்தின் வசூலும்..
அதிகரித்தது கொண்டே இருந்தது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி லாபத்தை பார்த்தது.. இப்பொழுதும் பல்வேறு திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு படம் ஜோராக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாக படகுழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது குறிப்பாக வெந்து தணிந்தது காடு படத்தை எடுத்த தயாரிப்பாளர்.
ஐசரி கணேஷ் குஷியில் இருக்கிறார் அதனால் தற்பொழுது படத்தை எடுத்த கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு புல்லட்டை பரிசாக கொடுத்தார் அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு விலை உயர்ந்த பிரம்மாண்ட சொகுசு காரை பரிசாக கொடுத்தார் இந்த இரண்டு புகைப்படங்களுமே இணையதள பக்கத்தில் பெரிய அளவில் வைரலானது அதனைத் தொடர்ந்து நடிகர் கூல் சுரேஷுக்கும் ஒரு கிப்ட்டை தந்துள்ளார்.
உண்மையில் வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய அளவில் ரீச்சாக ஒரு காரணம் நடிகர் கூல் சுரேஷ் தான் ஏனென்றால் ஒவ்வொரு புது படம் வரும்போதும் அந்த படத்தைப் பற்றி பேசுகிறாரோ.. இல்லையோ.. சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி பேசி ப்ரொமோஷன் செய்தார் அதனை முன்னிட்டு தற்பொழுது தயாரிப்பாளர் கூல் சுரேஷ் அழைத்து ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் அதன் போட்டோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது..