தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ் பல சிறந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் கர்ணன் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் மாறன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை.
இப்படி இந்த இரண்டு திரைப்படங்களும் தோல்வியை சந்தித்ததை அடுத்து தனுஷிற்கு குடும்ப வாழ்க்கையும் பிரச்சினையாகவே அமைகின்றன. நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு கடந்த 18 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
ஐஸ்வர்யாவும் மூணு, வை ராஜா வை போன்ற திரைப்படங்களை தமிழ் சினிமாவில் இயக்கியிருந்தார் பின்பு சினிமாவில் அதிகம் ஆர்வம் இல்லாமல் இருந்த ஐஸ்வர்யா தற்போது விவாகரத்திற்கு பிறகு பாடல்கள் வெளியிடுவது படங்கள் இயக்குவது என பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகும் போன்ற பன்முகங்கள் கொண்டவர்.
ராஜ்கிரன் மற்றும் நடிகை ரேவதி நடிப்பில் வெளிவந்த பவர் பாண்டி என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.
மேலும் தனுஷ் இயக்கயுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் டிவி பிரபலங்களான ரோபோ சங்கர் மற்றும் ராமர் நடிக்க உள்ளார்கள் என தெரியவருகிறது. இவர்கள் நடிக்கிறார்கள் என்றால் அந்த படம் முற்றிலும் ஒரு காமெடி நிறைந்த படமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் நடைபெறும் எனவும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் எனவும் தெரியவருகிறது.