குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட புதிய கோமாளி.! அவருக்கு பதில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி பிரபலம்..

cook-with-comali-4
cook-with-comali-4

விஜய் டிவியில் என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சமில்லாமல் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் சமீபத்தில் சமையல் நிகழ்ச்சியும், காமெடியும் கலந்து உருவாகி உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் நான்காவது சீசன் தற்பொழுது அறிமுகமாகியுள்ளது இந்நிகழ்ச்சி கடந்த மூன்று சீசன்களும் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் பங்குபெற்று வருகின்றனர். இவர்கள் அடுத்து ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்த குக் வித் கோமாளி சீசன் நான்காவது நிகழ்ச்சியில் புதிய கோமாளிகளை களம் இறக்கி இருந்தனர். அதற்கு முக்கிய காரணம் கடந்த மூன்று சீசன்களிலும் கோமாளிகளாக பங்கு பெற்று வந்த ஏராளமானவர்களுக்கு தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பாலா, புகழ், சிவாங்கி போன்றவர்கள் தற்போது திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு பதிலாக கோமாளிகளாக ஜிபி முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா, மணிமேகலை, சுனிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இப்படிப்பட்ட நிலையில் மற்ற சீசன்களை விட குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிகள் சுவாரஸ்யம் குறைவாக இருந்ததன் காரணமாக கோமாளி ஒருவரை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு பிரபலத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் எனவே இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.

அது வேறு யாருமில்லை குக் வித் கோமாளி நான்காவது சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட ஓட்டேரி சிவா தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் இவருக்கு பதிலாக கலக்கப்போவது யாரு பிரபலம் தங்கதுரை பங்கேற்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தங்கதுரை கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பிறகு தன்னுடைய மொக்கை ஜோக்கினால் பட்டுத்தோட்டி எங்கும் பிரபலமானார்.

எனவே இவரை மொக்க ஜோக் தங்கதுரை என அழைத்து வருகிறார்கள். எனவே இதற்கு மேல் இந்நிகழ்ச்சி மேலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது இருந்தாலும் ஓட்டேரி சிவா இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.