பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க தொடங்கிய புதிய பிரபலம்.? வெளியான புகைப்படம் – இது உண்மையா.?

bharathi kanamma

பொதுவாக பெண்கள் பலரும் படிப்பை முடித்து விட்டு பின்பு மாடலிங் துறையையே தேர்வு செய்கின்றன. அப்படி மாடலிங் துறையில் சிறப்பாக கலக்கி வந்தவர்தான் ரோஷினி ஹரிப்ரியன். பின்பு அவருக்கு இதன் மூலம் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த தொடரின் இயக்குனரான பிரவீன் பெண்ணெட் இந்த கதைக்கு ஏற்றவாறு ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருக்கையில் ரோஷினி தேர்வாகி உள்ளார்.இந்த சீரியலில் நடிக்க முக்கியம் இவரது நிறமே காரணமாகும். ஆனால் இந்த சீரியல் ஆரம்பத்தில் நினைத்ததை விட தற்போது செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் தற்போது வருத்தமான விஷயம் என்னவென்றால் சீரியலில் நடிக்கும் பல பிரபலங்களும் பாப்புலர் ஆன பிறகு வெள்ளித்திரையில் அவர்களுக்கு வாய்ப்புகள் வந்ததும் சீரியலை விட்டு பாதியில் விலகி விடுகின்றன. அப்படித்தான் சமீபத்தில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் டாப் ஹீரோவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளார்.

தற்போது வெளிவந்து தகவல் என்னவென்றால் இந்த சிரியலில் இருந்து ரோஷினி பட வாய்ப்புகள் வந்து உள்ளதால் சீரியலில் இருந்து விலகியுள்ளாராம். தற்போது கண்ணம்மாவுக்கு பதிலாக வினுஷா தேவி என்ற டிக் டாக் பிரபலத்தை நடிக்க வைக்க சீரியல் குழு தேர்வு செய்துள்ளது.

இந்த செய்தி இதுவரை வெளியாகி வந்த நிலையில் தற்போது சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷாதேவி நடிப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்ணம்மா போலவே உள்ளார் என கூறி வருகின்றன. மேலும் அவரது திறமை ரோஷினி போல இருக்குமா என தெரியவில்லையே என கமென்ட் செய்து வருகின்றனர்.

bharathi kanamma
bharathi kanamma