90 கட்டங்களில் என்னதான் வடிவேலு கவுண்டமணி போன்ற காமெடியன்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக வித்தியாசமான மற்றும் சமூக அக்கறை உள்ள காமெடிகளை மக்களுக்கு எடுத்துரைத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி கொண்டவர் நடிகர் விவேக். உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா வாழ்க்கையை துறந்தார்.
அதன்பிறகு பல்வேறு விதமான படங்களில் தனது சமூக அக்கறையுள்ள காமெடிகளை கொடுத்து மக்களை சிந்திக்க வைத்ததோடு சிரிக்க வைத்து அசத்தினார். கருத்துக்களை சொல்லி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அதையும் தாண்டி பல்வேறு சிறந்த இயக்குனர்கள் மத்தியில் நல்ல பெயரையும் பிடித்ததால் நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் ஜாம்பவான்கள் உடன் நடித்து வந்தாலும் அதையும் தாண்டி அவர் சமூக சேவகராக இருந்துள்ளார். சினிமாவில் நேரம்போக தன்னால் முடிந்த பொது சேவைகள் மற்றும் சாலை ஓரங்களில் மரங்களை நடுவது போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதிலும் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததன் காரணமாக பல்வேறு சேவைகளை செய்து வந்தார் மேலும் இவர் கிரீன் கலாம் என்ற பெயரில் ஒரு கோடி மரக்கன்று நட ஆசைப்பட்டார்.
ஆனால் அது நிறைவேறுவதற்குள் இந்த உலகைவிட்டு மறைந்தார் நடிகர் விவேக். இப்பொழுது விவேக் அவர்கள் இல்லை என்றாலும் சினிமா ரசிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலரும் தற்போது மரக்கன்றுகளை நடுவது உறுதியளித்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகின்றனர். விவேக் தற்பொழுது இல்லை என்றாலும் அவரது திரைப்படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இது இன்னும் விருதுகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
அந்த வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சைமா விருது விழா அண்மையில் நடந்தது அதில் விவேக் அவர்களது விருந்து வழங்கப்பட்டது. கடைசியாக ஹரிஷ் கல்யாணு டன் இணைந்து தாராள பிரபு என்ற திரைப்படத்தில் டாக்டராக நடித்திருப்பார் இந்த படத்திற்காக சிறந்த காமெடி நடிகற்குகான விருது விவேக்குக்கு சென்றது.
அந்த விருதை அவரது சார்பாக யோகி பாபு பெற்றுக்கொண்டார். இந்த விருது குறித்து நடிகர் விவேக்கின் மகள் சமூக வலைதளப் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டு உள்ளார். அவர் கூறியது தன்னுடைய அப்பா விருது பெற்றதற்கு தாராளப் பிரபு குழுவில் அனைவருக்கும் நன்றி, இதை கொண்டு வந்த யோகி பாபு அவர்களுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.