பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் புதிய நடிகர் – வெளியே வந்த புகைப்படம்.!

pandian store

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் கொண்டாடும் ஒரு முக்கிய சீரியலாக பார்க்கப்படுவது பாண்டியன் ஸ்டோர் தொடர். இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பியிலும் டாப் லிஸ்டில் இருந்து வருகின்றன.

இதில் ஸ்டாலின், வெங்கட், குமரன், சுஜிதா, காவியா, ஹேமா, சாய் காயத்ரி போன்ற பல நடிகர் நடிகைகளும் சிறப்பாக நடித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர் தொடரில் தற்போது கதிர் முல்லை இருவரும் வீட்டை விட்டு வெளியேற மூர்த்தி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆப்ரேஷன் செய்து தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதனால்  பாண்டியன் ஸ்டோர் மளிகை கடையை ஜீவா மட்டும் தனியாக பார்த்து வருவதால் கடையை சமாளிக்க முடியவில்லை.. இதனால் என்ன செய்வது என்று யோசித்து தனமும் சில தினங்களாக கடைக்கு சென்று கடையை கவனித்து வருகிறார். தனம் வீட்டில் இல்லாததால் மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமைக்க போட்டி போட்டு கொள்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் நடிக்க வந்துள்ளார். ஆம் இந்த பாண்டியன் ஸ்டோர் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த குமரேசன் மாமா என்ற கதாபாத்திரத்தில் நெல்லை சிவா நடித்து வந்தார். அவர் நிஜத்தில் உயிரிழந்ததன் காரணமாக இந்த சீரியலில் நடிக்காமல் இருந்தார்.

மேலும் அவருக்கு பதில் வேறு கதாபாத்திரமும் மாற்றாமல் இருந்து வந்த நிலையில் தற்போது குமரேசன் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடிக்க வந்துள்ளாராம். அவர் யார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

kumaran-mama-
kumaran-mama-