இதுவரைக்கும் இந்த மாதிரி கதையை கேட்டதே இல்லை.! 20 வருஷமா கோமாவில் இருந்தீங்களா விஜய் சார்.? வச்சி செய்யும் நெட்டிசன்கள்…

vijay
vijay

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் டிரைலரை பார்த்து பல விமர்சகர்களும் ரசிகர்களும் ட்ரோல் செய்து மிகக் கடுமையான முறையில் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் வாரிசு படத்தின் கதையை 20 ஆண்டுகளாக கேட்கவே இல்லை என்று விஜய் அவர்கள் கூறியுள்ளாராம். ஏற்கனவே கடுப்பில் இருந்த ரசிகர்களும் விமர்சனங்களும் நீங்க என்ன 20 வருஷமா கோமாவில் இருந்தீங்களா என்று விஜய்யை விமர்சித்து வருகிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளிவர காத்திருக்கிறது. இதனை தொடர்ந்து வாரிசு படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் வாரிசு படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த ட்ரெய்லரை பார்த்த பலரும் ஆலுக்கால் ஒன்று சொல்லி விமர்சித்து வந்த நிலையில் தற்போது விஜய் வைத்து பங்கம் செய்யும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி அவர்கள் இந்த படத்தின் கதையை முதலில் மகேஷ் பாபுவிடம் கூறியிருக்கிறார் ஏற்கனவே மகேஷ்பாபு வம்சியை நம்பி மகரிஷி படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்ததை தொடர்ந்து வாரிசு படத்தின் கதையை கேட்ட உடனே இந்த படத்திற்கு நோ சொல்லிவிட்டாராம் நடிகர் மகேஷ்பாபு.

அதன் பிறகு இந்த படத்தின் கதையை அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் ஆகியோரிடம் கூறியிருக்கிறார் ஆனால் அவர்கள் இந்த கதையை கேட்டதும் தெறித்து ஓடி விட்டார்கள் அதன் பிறகு தான் வாரிசு படத்தின் கதை விஜய் இடம் வந்தது. இந்த படத்தின் கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம் இதை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் சொல்லிதான் தற்போது நமக்குத் தெரிய வந்தது.

அதுமட்டுமல்லாமல் வம்சி அவர்கள் இந்த கதையை விஜயிடம் கூறிய உடனே விஜய் அவர்கள் நான் 20 வருடத்தில் இப்படி ஒரு கதையை கேட்டதே இல்லை என்று கூறி நெகிழ்ச்சி அடைந்து இருக்கிறாராம். விஜய்யே இந்த படத்தின் கதையைக் கேட்டு வேற லெவல் என்று கூறியது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஆனால் இந்த படத்தின் டிரைலர் வெளியான பிறகு தான் தெரிகிறது வம்சி இதுவரைக்கும் இயக்கிய படங்களின் கதைகளில் இருந்து சுட்டதுதான் தான் வாரிசு கதை என்று.

இது தெரியாமல் விஜய்யே வாண்டடாக போய் சிக்கி கொண்டார். இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை இந்த கதையை கேட்டு 20 வருஷமா இந்த மாதிரி கதையை கேட்டதே இல்லை என்றதுதான் நெட்டிசங்களுக்கு மிக பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ட்ரைலரைப் பார்த்து கடுப்பில் இருந்த நெட்டிசன்கள் தற்போது இந்த தகவல் வெளியானதும் விஜயை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.