அஜித்துடன் இதுவரை நடித்ததில்லை ஆனால் நடிக்க ஆசை.! அந்த கதாபாத்திரம் மட்டும் வேண்டாம் முறுக்கு மீசை வெட்டருவாள் நடிகர் ஓபன் டாக்.!

thala ajith

தமிழ் சினிமா உலகில் ஆறு அடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடம்பு மற்றும் முறுக்கு மீசையுடன் காணப்படும் ஒரே நடிகர் நெப்போலியன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் தனது கம்பீர குரலாலும் தனது நடிப்பாலும் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர் பாரதிராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் இவர் இதுவரையிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நெப்போலியன் அவர்கள்  நடிப்பில் எப்படி அதிக ஈடுபாடு கொண்டவரோ அதே போல அரசியலும் அதிக பற்று கொண்டவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமா உலகில் கடைசியாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சீமராஜா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் நெப்போலியன் அவர்கள் சமிபத்திய பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் விஜய்,அஜித் பற்றி பெரிதும் பேசியுள்ளார் அவர் கூறியது.விஜய் பற்றி அந்த அளவிற்கு எனக்கு தெரியாது ஏனென்றால் அவரது படங்களை நான் பார்ப்பதில்லை அதுமட்டுமில்லாமல் அவருக்கும் எனக்கும் போக்கிரி படத்தின் போது மனஸ்தாபம் ஏற்பட்டது உண்மை தான் இருப்பினும் இப்படத்தில் பிரபுதேவாவுக்கு இணையாக நடனமாடினார் என்றும் கூறினார்.

ajith and vijay
ajith and vijay

அதே போல அஜித் குறித்து பேசிய நெப்போலியன் இதுவரை நான் நடிக்காத ஒரே நடிகர் அஜித் தான் அவருடன் இணைந்து நடிக்க ஆசைதான் ஆனால் கண்டிப்பாக அவருடன் வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன். அவரது படத்தில் ஒரு நல்ல சப்போர்ட்டிங் ரோல் இருந்தால் நான் நடிகை விரும்புவேன் என நெப்போலியன் அவர்கள் கூறியிருந்தார்.