லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து விறுவிறுப்பான காட்சி.! போலீசையே பிரமிக்க வைக்கிறாரே நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஆரம்ப  காலகட்டத்தில் சரியான படத்தை தேர்வு செய்யாமல் கொஞ்சம் சொதப்பினார் பின்பு காதலில் விழுந்து அதிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து படத்தில் நடிக்க ஆரம்பித்தார் தற்பொழுது வித்தியாசமான கதைகள் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிக்கும் திரைப்படத்தை ஹீரோவே இல்லை என்றாலும் இவர் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் அதற்கு காரணம் நல்ல கதை உள்ள திரைப்படம் என்பதால் தான். அதுமட்டுமில்லாமல் பெரிய ஹீரோ பட வசூலுக்கு இணையாக நயன்தாராவின் திரைப்படம்  வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார்.

அதே போல் அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகி மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனைத்தொடர்ந்து அண்ணாத்த, காற்றுவாக்கில் இரண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை அவள் திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராஜி இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் அஜ்மல் மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் சமீபத்தில் ட்ரைலர்  வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது இந்த நிலையில் படத்திலிருந்து ஒரு முக்கிய காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.