மரண மாஸாக இருக்கும் நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்துள்ளார்.

ரஜினி முதல் அஜித், விஜய் வரை பல நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார், சொல்லப்போனால் இரண்டாம் கட்ட நடிகர்களுடன கூட ஜோடி போட்டு நடித்து விட்டார், நயன்தாரா தற்போது ரஜினியின் அண்ணாதுரை படத்திலும் ஆர் ஜே பாலாஜி உடன் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இப்படி இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்து இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்கள் இந்தநிலையில் விக்னேஸ்வரன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை மெலிந்த ராவ் இயக்கி வருகிறார், சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது, சில மணி நேரத்திலேயே ரசிகர்கள் மிகவும் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் படத்தில் கிருஷ் தான் இசையமைத்து வருகிறார், ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, திலிப் சுப்புராயன் ஸ்டன்ட் இயக்கம் செய்து வருகிறார் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி நயன்தாராவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.