Vijay Leo: தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகளை படக் குழுவினர்கள் பகிர்ந்து வருகின்றனர். மாஸ்டர் படத்தின் வெற்றினை தொடர்ந்து விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், கௌதம மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
எனவே படக்குழு ப்ரோமோஷன் பணிகளை தொடங்கி இருக்கும் நிலையில் அதற்கான அப்டேட்டுகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இந்த போஸ்டர்களை பார்த்த நெட்டிசன்கள் இளம் இயக்குனர் பலரும் கதைகளையும், காட்சிகளையும் வேறு மொழியிலிருந்து காப்பி அடிப்பது வழக்கமாக இருப்பதாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது.
அதேபோல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜன் இந்த சர்ச்சையில் சிக்கிய உள்ளார். அதாவது Cold Pursuit என்ற படத்தின் போஸ்டரை போலவே விஜய்யின் லியோ படத்தின் போஸ்டரும் இருப்பதாகவும், மேலும் மற்றொரு போஸ்டர் ஆயுதம் என்ற படத்தின் போஸ்டரை போல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
எனவே இதற்காக நெட்டிசன்கள் அட்லீயை விட லோகேஷ் பெரிய ஆளா இருப்பாரு போல என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். இதனை அடுத்து A History of Violence என்ற படத்தின் தழுவல் தான் லியோ என்றும் கூறப்படும் நிலையில் இது குறித்து லியோ படக் குழுவினர்கள் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.