இந்த படத்தின் காபி தான் லியோவா? நிரூபித்த ரசிகர்கள்..

leo movie 1

Leo Movie: லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் காபி தான் லியோ படம் எனவும் அச்சு அசல் அந்த படத்தில் இருக்கும் அதே காட்சிகள் லியோ படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. லியோவில் அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளில் விஜய் டூப் போடாமல் நடித்து மிரட்டி இருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது மேலும் இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் லியோ படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் டிரைலரில் சில ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்று இருப்பதனால் அதனை நீக்குமாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்த பிரச்சனை ஒருபுறம் போய்க்கொண்டிருக்க மறுபுறம் இது ஹாலிவுட் படத்தின் காபி என்று கூறப்படுகிறது

அதாவது லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படங்கள் அதிகம் பார்ப்பார் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி ஹாலிவுட்டில் மாஸ் ஹிட் அடித்த ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகளும் மேலும் மற்ற ஹாலிவுட் படங்களின் காட்சிகளையும் இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு லியோ படத்தை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

vijay leo
vijay leo

மேலும் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான படம் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் இதில் ஒரு நகரில் உணவு கடை வைத்து நடத்தி வரும் ஹீரோ தன் ஊருக்குள் வரும் திருடர்களை கொள்கிறான். இதனால் அவனை அந்த நகரில் கொண்டாடுகிறார்கள் அவன் செய்த கொலையால் கேங்ஸ்டர்கள் அவனைத் தேடி வருகின்றனர்.

இதனால் அவனது குடும்பத்துடன் ஆன உறவு ஹீரோவிற்கு முறிந்து போகிறது. அடுத்து அவன் வாழ்வில் என்ன நிகழப் போகிறது என்பதுதான் கதை அந்த படத்தின் கதையே லியோ படத்தில் இடம் பெற்றிருப்பதாக டிரைலரை பார்த்துவிட்டு ரசிகர்கள் ஒப்பிட்டு கூறி வருகிறார்கள்.