கார்த்தியின் இந்த படத்தின் காபி தான் ஜவான்.. ஷாருக்கானை வைத்து தரமான சம்பவம் செய்த அட்லீ!

jawan 2
jawan 2

Jawan: இயக்குனர் அட்லீ ஜவான் படத்தினை இயக்கியிருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற 7ம் தேதி அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து ட்ரெய்லர் நேற்று வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் ஜவான் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க இந்த படத்தின் கதையை குறித்து நெட்டிசன்கள் ரோல் செய்து வருகின்றனர்.

பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக பதான் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.  இதனை தொடர்ந்த அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் பதான் படத்தினை போலவே ஜவான் படமும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் அட்லீ முதன்முறையாக ஹிந்தி படத்தினை இயக்கிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஷாருக்கானின் ஜவான் 1990களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் நேற்று வெளியான ஜவான் ட்ரைலரை பார்க்கும்பொழுது இது கார்த்தியின் சர்தார் பட கதையாக இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பா மகன் பாச உறவினை மையமாக வைத்து உருவான சர்தார் படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

jawan
jawan

அதில் கார்த்தி இரட்டைக் வேடத்தில் நடிக்க அப்பாவின் மீதான கலங்கத்தை துடைக்க போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இறுதியாக இருவரும் வில்லனை எப்படி பழிவாங்குகிறார்கள் என்பது படத்தின் கதை. அப்படி ஜவான் ட்ரைலரில் அப்பா ஷாருக்கான் ராணுவத்தில் ஜவானாக இருப்பது தெரியவந்துள்ளது. அவர் மீது தேசத்துரோகி முத்திரைவு வர அதற்காக பழிவாங்கும் முயற்சியை தொடங்குகிறார் மகன் ஷாருக்கான். எனவே ஜவான் கதையும் கார்த்தியின் சர்தார் பட கதையும் ஒன்றுதான் என்று அட்லீயை கலாய்த்து வருகின்றனர்.