நிம்மதியாக வாழ விடுக.. விமான நிலையத்தில் அஜித்தை மடக்கி தொந்தரவு செய்த ரசிகர்கள்

ajith
ajith

Actor Ajith Kumar: நடிகர் அஜித் ஏர்போர்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது ரசிகர்களின் செயலை பார்த்து பலரும் அறிவுரை கூறி வருகின்றனர். நடிகர் அஜித் சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பா பைக் பயணத்தில் பிஸியாக இருந்து வந்த நிலையில் இறுதியாக சென்னை திரும்பினார்.

ஆகஸ்ட் 23 புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய அஜித்தை அவரது வெறித்தனமான ரசிகர்கள் கும்பலாக வந்து தொந்தரவு செய்தனர். அஜித்குமார் எப்பொழுதும் பாதுகாப்பை தவிர்ப்பது, விமான நிலையங்களில் இருந்து தானாகவே வெளி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அஜித்தை கண்ட அவரது தீவிர ரசிகர்கள் அவரை சூழ்ந்து போட்டோ எடுக்கவும், கை கொடுக்கவும் முயற்சி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அதில் அஜித் அசோகரிகமாக உணர்வது தெரிந்தது. அவருடைய தனி உரிமையை மதிக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப்படாத ரசிகர்கள் இவ்வாறு மொபைல் போன்களுடன் பின் தொடர்ந்து வர இதற்கிடையில் லக்கேஜ் எடுத்து செல்ல சிரமப்படுவது தெரிந்தும் கூட அஜித் ரசிகர்கள் அதை எல்லாம் கொஞ்சம் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கும்பலாக அவரை சுற்றி வளைக்கிறார்கள்.

இந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் அவர்களை சோசியல் மீடியாவில் திட்டி தீர்த்து வருகின்றனர். மக்கள் சில நல்ல பழக்கங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பயனர் கருத்து தெரிவித்துள்ளார். அவரை நிம்மதியாக வாழ விடுங்கள்.. என மற்றொரு நெட்டிசன் கூற, தயவு செய்து அவரது பிரைவசி மாற்றம் பர்சனல் விஷயங்களுக்கு மதிப்பு கொடுங்கள் என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.