சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பை பெற்று வருபவர்கள் பலர் உள்ளார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் தொகுப்பாளினி பார்வதி இவர் யூடியூப் தொகுப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் சமீப காலங்களாக பெற்று வருகிறார். மேலும் இவர் தொடர்பை ஏராளமான பிரபலங்களை சந்தித்து அவர்களிடம் பேட்டி எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதில் முக்கியமாக கடந்த வருடம் ஹிப்பாப் ஆதி நேர்காணல் கொடுத்து இருந்தார் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏனென்றால் பார்வதியிடம் ஹிப்ஹாப் ஆதி தன்னுடைய பழைய நினைவுகள், விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயங்களும், எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற பல விஷயங்களை பகிர அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
அந்த நேர்காணலின் பொழுது ஆதியிடம் பார்வதி நீங்கள் ஆண்டியை சைட் அடிச்சு இருக்கீங்களா என்று கேட்டார் அதற்கு உங்களை பார்ப்பதற்கு முன்னாடி வரையும் யாரும் இல்லை என கலாய்த்தார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானது. இதன் மூலம்தான் இவருக்கு சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை கிடைத்தது.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்றார் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சில நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் பப் ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இதற்கு பலரும் கமெண்டுகள் தெரிவித்து வந்தார்கள் அதில் ஒரு ரசிகர் நான் என்னமோ நீங்க நல்லா பேசுறீங்க, நல்லா ஆங்கரிங் பண்றீங்க நல்ல பொண்ணு நினைச்சேன் ஆனா இப்படி டான்ஸ் பார்லர் போய் குடிச்சிட்டு டான்ஸ் ஆடுறீங்க அதனால நீங்களும் எல்லாம் மாடர்ன் பொண்ணுங்க மாதிரி ஆயிட்டீங்க என்று கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு பதில் அளித்த பார்வதி இசையும் நடனமும் சுதந்திரத்தின் வெளிப்பாடு நான் வேலை செய்கிறேன் அதன் மூலம் வரும் அழுத்தத்தை இசை மற்றும் நடனத்தின் மூலம் வெளியேற்றுகிறேன் இதனை தடுத்து யாரும் உரிமை கிடையாது. ஏனென்றால் நான் சட்டப்படி அதற்கு தகுதியானவர் சமூக பார்வையை பற்றி எனக்கு கவலை கிடையாது என்னுடைய சந்தோஷம்தான் எனக்கு முக்கியம் என்று கூறியிருந்தார்.
Vj paaru vibing 😍😍😍 pic.twitter.com/qGM2nCAZ0A
— Anbu (@Mysteri13472103) March 14, 2022