Actor Vijay sethupathi: அந்தரங்க காட்சிகளில் நடித்ததால் விஜய் சேதுபதி தன்னுடைய மொத்த பெயரையும் டேமேஜ் செய்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி பொதுவாக மற்ற நடிகர்கள் போன்று இல்லாமல் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் என்று தற்பொழுது வரையிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். அந்த வகையில் ஹீரோவாக அறிமுகமான இவர் வில்லனாகவும், குணசேத்திர நடிகராகவும் கலக்கி வருகிறார்.
இதன் மூலம் பாலிவுட் , டோலிவுட் என பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அப்படி பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் கத்ரீனா கைஃப்க்கு ஜோடியாக மேரி கிறிஸ்மஸ் படத்திலும் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. பொதுவாக இவர் ஹீரோயின்களுடன் ஓரளவிற்கு மட்டுமே ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து வருகிறார்.
கண்ணியமாக நடிக்க கூடிய ஒருவர் ஆனால் தற்பொழுது காசுக்காக அந்தரங்க காட்சிகளில் நடித்துள்ளார். அதாவது ஃபார்ஸி என்ற ஹிந்தி வெப் சீரியல் ஒன்றில் நடிகை ராசி கண்ணா உடன் அந்தரங்க காட்சிகளில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். இவ்வாறு இந்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இவருடைய ரசிகர்கள் காசுக்காக விஜய் சேதுபதி இப்படி நடிக்கலாமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதுவரையிலும் இதுபோன்ற சர்ச்சையில் சிக்காத இவர் முதன் முறையாக சிக்கி இருக்கிறார். இதனை அடுத்து ஜவான் திரைப்படத்தில் நடித்தவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.