ஒரே ஒரு கண்ணை அசைத்து ஒட்டுமொத்த உலகையும் வலைத்து போட்டவர் நடிகை பிரியா வாரியர். இவர் 2017ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த கண்ணடிக்கும் காட்சி மூலம் தான் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.இதன் மூலம் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. அந்தவகையில் இவர் மலையாளத்தில் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம்,இந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கலக்கி வருகிறார்.
விரைவில் தமிழிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது, ரசிகர்களிடம் லைவ் சேட்டில் கலந்துரையாடுவது போன்ற பல செயல்களை செய்து வருகிறார்கள்.
அந்தவகையில் பிரியா வாரியார் தொடர்ந்து தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் மிகவும் தொடர்ந்து அவதூறாக பேசி வந்ததால் பிரியா வாரியர் அந்த நபரின் ஐடி-ஐ ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஏன் நீ உன்னுடைய உண்மையான ஐடியில் இருந்து கமெண்ட் செய்யாமல் போலி அடியிலிருந்து கமெண்ட் செய்கிறாய் உனக்கு தைரியம் இல்லையா என்று பதிலடி கொடுத்துள்ளார்.