விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதோடு மட்டுமல்லாமல் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்களும் மிகவும் சர்ச்சைக்குரிய சண்டைகள் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் அனைத்துப் போட்டியாளர்களும் மிகவும் செபாக விளையாண்டு வருவதாக கமலஹாசன், ரசிகர்கள் என அனைவரும் கூறிவரும் நிலையில் இந்த மாதிரி ஓபன் நாமினேஷன் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.
மேலும் வாரம் வாரம் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் 14 போட்டியாளர்களும் இரண்டு டீம்மாக பிரிந்து பயங்கர சண்டை உடன் விளையாடி வருகிறார்கள் அந்த வகையில் ஏலியன் டீமில் இருக்கும் தனலட்சுமி பழங்குடியினர் டீமில் இருக்கும் ADK பிடித்து இழுக்க முயற்சி செய்கிறார்.
அப்பொழுது தனலட்சுமியின் ஆடை கிழிந்து விடுகிறது எனவே அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சும்மாவே தனலட்சுமி சண்டை போடுவதில் வல்லவர் இந்த சம்பவத்திற்கு பிறகு கொடூரமாக சண்டை போடுகிறார் அதோடு மட்டுமல்லாமல் மரியாதை இல்லாமலும் பேசி வருகிறார்.
இவ்வாறு அனைத்து போட்டியாளர்களும் கடுமையாக சண்டை போட்டு வரும் நிலையில் இந்த வார நாமினேஷனில் மைனா, ரட்சிதா, குயின்சி, கதிரவன், தனலட்சுமி, ஜனனி உள்ளிட்ட ஆறு பேரும் சிக்கி உள்ளார்கள். இவர்களில் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இவ்வாறு 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது 7 பேர் வெளியாகி 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியான நிலையில் இந்த வாரம் குயின்சி வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.