தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மகாலிங்காலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுடைய திருமண வீடியோவை ஒளிபரப்பு உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது இது குறித்த டாக்குமெண்டரியை இயக்குனர் கௌதமேனன் இயக்க இருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 100 நாட்களுக்கு மேலாகி உள்ள நிலையில் தற்போது அந்த திருமண வீடியோவை விரைவில் ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்ட டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள் மேலும் அடுத்த மாதம் இவர்களுடைய திருமண வீடியோவை நெட்லிக்ஸ் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நேற்று துபாயில் நயன்தாரா மிகவும் கோலாகலமாக கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இதனை தொடர்ந்து நயன்தாரா அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.
மேலும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில் பலரும் பொறாமையில் இருந்து வருகிறார்கள் ஏனென்றால் இவர்களின் திருமணம் நடக்கும் பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவனை விட்டு விரைவில் பிரிந்து விடுவார் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது வரையிலும் இவர்கள் ஒன்றாக இருந்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.