தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் தங்களது ஸ்டைலில் விதவிதமாக திரைப்படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் இயக்குனர் செல்வராகவனுக்கென ஒரு தனித்துவமான திரைப்படத்தை இயக்கும் திறமை உள்ளது.
கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ngk திரைப்படம் தோல்வியை தழுவியதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கவுள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ். ஜே சூர்யா, ரெஜினா கஸன்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 5-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து ஒருசில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவருடைய ஸ்டைலில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளார்.இதோ அந்த வீடியோ.