தமிழ் சினிமாவில் தற்போது மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நெல்சன் திலீப்குமார் இவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, இளவரசன், தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்த அதுமட்டுமில்லாமல் கதாநாயகியாக பிரியங்கா அவர்கள் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவராக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பலிடம் இருந்து சிக்கிக்கொண்ட குழந்தையை காப்பாற்றுவது தான் கதை.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் திட்டம் மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் மிகவும் சஸ்பென்ஸாக இந்த திரைப்படத்தின் கதையை கொண்டு சென்றுள்ளார் நெல்சன். மேலும் இத்திரைப்படத்தை ஒரு காமெடி கலந்த திரில்லர் திரைப்படம் என்று கூட சொல்லலாம்.
என்னதான் ஆக்சன் காட்சிகள் இத்திரைப்படத்தில் இருந்தாலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளை ரசிகர்கள் பெருமளவு ரசித்துள்ளார்கள். பொதுவாக நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் அந்தவகையில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பலவகையும் நெல்சன் அவர்கள் தான் இயக்கி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் நெல்சன் அவர்கள் முதன்முதலாக சிம்புவை வைத்து தான் திரைப்படம் இயக்க இருந்தார் அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிம்புவை வைத்து இவர் வேட்டை மன்னன் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அப்போது இந்த திரைப்படத்தின் போஸ்டர் பல சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானது மட்டும் இல்லாமல் டீசர் கூட வெளிவந்தது ஆனால் இத்திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது மேலும் நெல்சன் இந்த திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அண்ணே ஆல் தி பெஸ்ட் கலக்குங்க என்று பதிவிட்டிருந்தார் இவ்வாறு இவர்கள் அப்போது போட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.