ஜெயிலரில் கிடைத்த காசை வேறு வழியில் வாரி இறைக்க போகும் நெல்சன்.. வந்தா மலை போன…

Nelson Dilipkumar
Nelson Dilipkumar

Nelson Dilipkumar : தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.  இவர் ரஜினியை வைத்து எடுத்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. அப்பா / மகன் பாசத்தை எடுத்துரைக்கும் ஒரு படமாக இருந்தாலும்..

கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார். அதனால் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது ஒட்டுமொத்தமாக 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது.  இதனால் சந்தோஷமடைந்த ஜெயிலர் பட தயாரிப்பாளர் கலாநிதிமாறன்..

நெல்சனுக்கு செக் மற்றும் சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார் இதே போல ரஜினி, அனிருத் ஆகியவர்களுக்கும் செக் மற்றும் ஒரு கோடி மதிப்புள்ளான பரிசை கொடுத்தார். அவர்களை தொடர்வது படத்தில் பணியாற்றிய சின்ன நடிகர்கள் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தின் வெற்றியால் நெல்சன் திலீப்குமாருக்கு சம்பளம் தவிர செக் மற்றும் கார் வந்ததால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். அண்மையில் லண்டனுக்கு சுற்றுலா சென்று இருந்தார் அதன் புகைப்படம் கூட பெரிய அளவில் வைரலாகின. ஜெயிலர் படத்தின் வெற்றியால் நெல்சனுக்கு பணம் கோடிக்கணக்கில் குவிந்திருக்கிறது ஆதனால் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

நெல்சன் திருக்குமார் தயாரிக்கும் முதல் படத்தில் அனிருத் இசையமைக்க இருக்கிறார். பிரியங்கா அருள் மோகன், கவின் ஆகியவர்கள் ஹீரோ, ஹீரோயின்னாக நடிக்க இருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது படத்தின் சூட்டிங் அடுத்த வருடம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.