தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவை வைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் நெல்சன் திலிப் குமார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை இயக்கி மிகவும் பிரபலமானார்.
பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினியை வைத்து தற்போது ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் அப்டேட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. இதனைத் தொடர்ந்து பான் இந்திய திரைப்படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் நான்கு மாநிலத்தின் சூப்பர் ஸ்டார்களை களமிறக்கியுள்ளார் நெல்சன் திலிப் குமார்.
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், என்று நான்கு மாநிலங்களின் நடிகர்களை ஜெயிலர் படத்தில் இறக்கி ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் நெல்சன் திலிப் குமார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி அவர்கள் ஒரு ஜெயில் வார்டனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜெயில் வார்டனாக இருக்கும் போது கைதிகள் தப்பிக்க நேரிடுகிறது அப்போது எல்லா கைதிகளையும் தடுத்து நிறுத்துகிறார் அதன் பிறகுதான் வில்லனுக்கும் ரஜினிக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமல்லாமல் இதுதான் ஜெயிலர் படத்தின் கதை என்று ஒரு தகவல் பரவி வருகிறது. மேலும் ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து விடும் எனவும் அதற்கான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.