தலைவரின் 169 படம் வெற்றி பெற கதையை வலுவாக்கும் நெல்சன்.! கூட இணைந்த பிரபல இயக்குனர்.? யார் தெரியுமா..

RAJINI
RAJINI

நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா டாக்டர் போன்ற படங்களை சூப்பராக எடுத்த நிலையில் தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தையும் வேற லெவலில் சம்பவம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் எதிர்பார்த்ததுபோல் இல்லாததால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் நெல்சன் ரஜினியை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க உள்ளார் என்ற தகவல் அப்பொழுது பேசப்பட்டது ரஜினியும் அதை உறுதிப்படுத்தினார் இதனால் தலைவரின் 169 வது திரைப்படம் உருவாக இருக்கிறது.

ரஜினி நெல்சன் மீது சற்று பயத்தில் தான் இருக்கிறார் காரணம் டாப் நடிகர்களை வைத்து இளம் இயக்குனர்கள் படமெடுக்கும் போதே பயத்தில் சில தவறுகளை செய்வது உண்டு.  அது பீஸ்ட படத்திலேயே நெல்சனுக்கு அரங்கேறியது. தற்போது தனது படத்திற்கும் அந்த தவறு வந்து விடும் என்ற பயம் ரஜினிக்கு வந்துள்ளது.

இதையடுத்து ரஜினி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் அதாவது நெல்சன் கதையை எழுதட்டும் ஆனால் அதில் சில மாற்றங்களை செய்ய அனுபவம் வாய்ந்த இயக்குனரும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமார் கதையை பலப்படுத்த நெல்சன் உடன் இணைவர் என்ற தகவல் வெளிவந்த வண்ணமே இருக்கிறது.

ஆனால் தலைவரின் 169 வது திரைப்படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பட குழு ரஜினிக்கு எந்த நடிகையை தேர்வு செய்யலாம் என்கின்ற வேலையையும் பார்த்து வருகிறதாம். ரஜினியின் 179 திரைப்படத்தில் ஹீரோயின் யார் என்பது தெரியவில்லை ஆனால் மகளாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.